திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக குடவாசலில் உள்ள வட்டார வள மையத்தில் 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தக பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது, இப்பயிற்சி ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு நாட்கள் வழங்குவதாக திட்டமிடப்பட்டு முதலில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு 6, 7-ம் தேதிகளில் நடைபெற்றது.